கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராட்டம் செய்த பொதுமக்களை சரமாரியாக தாக்கிய போலீசார்! [ video ]

கதிராமங்கலத்தில் போலீஸ் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது, போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் அருகே பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்த நிலையில், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி 2 ஆயிரம் போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே ஓஎன்ஜிசி எரிபொருள் குழாயில் இன்று ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதிலிருந்து எரிபொருள் வெளியேறியது. எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவிக் காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, எரிபொருளை அப்பகுதி வழியாகக் கொண்டு சென்ற ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும், அங்கு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ள தீயணைப்புத்துறையினரும் ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளும்  குவிந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள், எரிபொருள் குழாயை அங்கிருந்து முழுமையாக அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தங்களை நேரில் வந்து சந்தித்து விளக்கம்  வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், கதிராமங்கலத்திற்குள் போலீசார் நுழைய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் உள்ளே நுழையாத வண்ணம் வைக்கோல் மற்றும் காய்ந்த செடிகளுக்கு தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் பலரையும் கைது செய்து வருகின்றனர். இருப்பினும், போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தற்போது போர்க்களம் போல் கட்சியளிக்கிறது.

source : News7, Thanthi TV

Post you may like :

#BIGBREAKING ஓஎன்ஜிசி குழாய்கள் உடைந்து கசிவு |கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்! [ Video ]

கதிரமங்கலத்தில் என்ன நடக்கிறது? முழு விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன (Video)

Advertisements

#BIGBREAKING ஓஎன்ஜிசி குழாய்கள் உடைந்து கசிவு |கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்! [ Video ]

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம். குடிமக்கள் சுவாசிக்க கடினமாக இருப்பதாக் காண்கின்றனர், நகரின் வளிமண்டலம் ( Atmosphere ) எரிவாயு மற்றும் எண்ணெய் வாசனை உடன் நிரம்பியுள்ளது. ஓஎன்ஜிசி குழாய்கள் உடைந்து கசிவு, கசிவு தீ விபத்து விளைவிக்க வாய்ப்பு.

முன் ஒருமுறை , குடிமக்கள் ஓஎன்ஜிசி மறுத்தபோது, ஓஎன்ஜிசி “பராமரிப்பு மட்டுமே செய்துவருகிறோம் எந்த ஆபத்தும் விளைவிக்காது” என கூறினர். ஆனால் இப்போது அவர்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடக்கிறது.

Source: News7

கதிரமங்கலத்தில் என்ன நடக்கிறது? முழு விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன (Video)

ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் நல்லது – விவரிக்கப்பட்டது! உங்கள் கருத்து என்ன?

Image result for hydrocarbon project in tamilnadu

Hydrocarbon Extraction is Good – Explained! What’s your view?

We all know Hydrocarbon extraction / Methane extraction is the biggest issue that Tamil Nadu is facing right now. Though the ONGC claims of that there is “no risk” involved, it is clear to those who know about the process, it’s after effects and the irreparable condition it will lead to. So what do they mean by “Hydrocarbon Extraction is good”. Let’s watch the video.

தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் / மீத்தேன் பிரித்தெடுத்தல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஓஎன்ஜிசி கூற்றுக்கள் “ஆபத்து இல்லை” என்று கூறப்பட்டாலும், செயல்முறை பற்றி அறிந்தவர்களுக்கு இது தெளிவானது, அது விளைவுகள் சீரற்ற நிலைக்கு வழிவகுக்கும். “ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் நல்லது” என்பதன் அர்த்தம் என்ன? வீடியோவை பார்க்கலாம்.

Yes, friends. Hydrocarbon extraction is essential for the energy to be produced for the benefits for the people of the country. However, the only thing wrong with what’s going on is the method by which government implements it. When a huge amount of methane/hydrocarbon can be extracted from garbage than from the land, the government stays put with the idea siding with ONGC to take up methane only from lands, and that too, the land of our poor farmers.

ஆம், நண்பர்களே. நாட்டினருக்கு நன்மைகள் கிடைக்கும் ஆற்றலுக்கு ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் அவசியம். முறையான வழிமுறையை அரசாங்கம் தவறாக பயன்படுத்துகிறது. மீத்தேன் / ஹைட்ரோகார்பன் ஒரு பெரிய தொகை குப்பை இருந்து பிரித்தெடுக்கப்படும் முடியும் போதும் .ஏழை விவசாயிகளின் நிலத்திலிருந்து மீத்தேன் / ஹைட்ரோகார்பனைப் பிரித்தெடுக்கும் யோசனையுடன் அரசாங்கம் தொடர்கிறது.

It is open widely seen, there is a political reason behind this. However, what’s your view on Hydrocarbon extraction and do you think a political play is involved? What can we do as the plan is being implemented right now? Let us know in the comments!

இதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் உள்ளது. இருப்பினும், ஹைட்ரோகார்பன் பிரித்தெடுப்பதில் உங்கள் கருத்து என்ன, ஒரு அரசியல் நாடகம் சம்பந்தப்பட்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது நாம்  அதற்க்கு என்ன செய்யலாம்? கருத்துக்களில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!